search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திண்டுக்கல் கோவில் திருவிழா"

    திண்டுக்கல் புனித செபஸ்தியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு 900 ஆடுகள், 2000 கோழிகளை பலியிட்டு விடிய விடிய அன்னதானம் நடந்தது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் முத்தழகுப்பட்டியில் பிரசித்தி பெற்ற புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள், சங்கங்கள், வெளியூர் பிரமுகர்கள் ஆகியோர் செபஸ்தியாருக்கு ஆடுகள், கோழிகள், அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை காணிக்கையாக வழங்கினர்.

    அவ்வாறு மக்கள் காணிக்கையாக வழங்கிய 2 ஆயிரம் கோழிகள், 900 ஆடுகள், 130 மூடை அரிசிகள் ஆகியவற்றைக் கொண்டு நேற்று மதியம் உணவு சமைக்கப்பட்டது.

    மாலையில் தேவாலயத்தில் புனிதரின் மன்றாட்டு ஜெபம், வேண்டுதல் பூஜைக்கு பிறகு சமபந்தி விருந்து தொடங்கியது. மாலையில் தொடங்கிய இந்த அன்னதானம் விடிய விடிய நடைபெற்றது.

    இதில் திண்டுக்கல் நகரில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று உணவு அருந்தினர். மேலும் தங்கள் வீடுகளுக்கும், உணவினை வாங்கிச் சென்றனர்.

    சமையல் செய்யும் பணியில் நூற்றுக்கணக்கான சமையல் கலைஞர்கள் ஈடுபட்டனர். ஜாதி, மத வேறுபாடின்றி அனைத்து சமூகத்தினரும் இந்த அன்னதானத்தில் கலந்து கொண்டதுடன் செபஸ்தியாரையும் வழிபட்டுச் சென்றனர். இது குறித்து கோவில் நிர்வாகிகள் தெரிவிக்கையில், புனித செபஸ்தியாருக்கு தங்கள் குறைகள் மற்றும் வேண்டுதல் குறித்து பக்தர்கள் மன்றாடினால் அது நிச்சயம் நிறைவேறும். அவ்வாறு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிய செபஸ்தி யாருக்கு பக்தர்கள் அடுத்த ஆண்டு திருவிழாவின் போது தங்களால் இயன்ற காணிக்கையை வழங்குவர். அவ்வாறு பக்தர்கள் வழங்கும் காணிக்கை பொருட்களை கொண்டே உணவு தயாரித்து அனைவருக்கும் வழங்கி வருகிறோம்.

    ஒவ்வொரு வருடமும் பக்தர்கள் அளிக்கும் காணிக்கையின் அளவு அதிகரித்து வருவதில் இருந்தே இக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

    ×